flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

சனி, ஜனவரி 14, 2012

சமச்சீர் கல்வியில், 10ம் வகுப்பு மாதிரி வினாத்தாள்களை இணையதளத்தில், அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் இருந்து வந்த ஸ்டேட்போர்டு, ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், ஓரியண்டல் உள்ளிட்ட கல்வி முறைகளை ஒருங்கிணைத்து, சமச்சீர் கல்வி முறை உருவாக்கப்பட்டது.
இதில், நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு வரையில் சமச்சீர் கல்வி முறை, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.சமச்சீர் கல்வி திட்டத்தில், 9ம் வகுப்பு மற்றும், 10ம் வகுப்புக்கு செய்முறை தேர்வுகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இருந்த பாடத்திட்டங்களுக்கும், சமச்சீர் பாடத்திட்டங்களுக்கும் நிறைய வேறுபாடுகளும் இருந்தன. இதனால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இது ஒரு புதிய முயற்சியாகவே அமைந்துள்ளது.

இன்னும், மூன்று மாதத்தில் பொதுத்தேர்வு நடக்க உள்ள நிலையில், தனியார் பள்ளி மட்டுமின்றி, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், வினாக்கள் அமைக்கப்படும் முறை குறித்து குழப்பம் இருந்து வந்தது. இந்நிலையில், அரசு தேர்வுத்துறை சார்பில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், அறிவியல் பாடங்களுக்கு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாதிரி வினாத்தாள்கள் தேவைக்கேற்ப டவுன்லோடு செய்து கொள்ளும்படி வழி செய்யப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் நடக்கும், முதல் பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, இம்மாதிரி வினாத்தாள்கள் மிகுந்த உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.தமிழக அரசு தேர்வுத் துறை இணையதளம் மற்றும் வேறு சில இணைய தள பக்கங்களிலும், இவ்வினாத்தாள்களை டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

download link
Blogger Widgets
Back to TOP Testf