flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

புதன், ஜனவரி 11, 2012

தொடக்க கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் நியமன இழுத்தடிப்பிற்குக் காரணம், போதுமான பணி இடங்கள் இல்லாதது தான் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, பட்டதாரி ஆசிரியர் நிலையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் இடங்களில், புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய, துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இழுத்தடிப்பு ஏன்?தொடக்க கல்வித் துறைக்கு, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு பெற்ற 1,155 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்குவதில், ஒன்பது மாதங்களாக பிரச்னை இருந்து வருகிறது.இவர்களில், 750 பேருக்கு மட்டுமே காலிப் பணியிடங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே, புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் விவகாரம், இடியாப்ப சிக்கலாக நீடித்துக் கொண்டிருக்கிறது.

நியமன ஆலோசனை:மே 31ம் தேதி, கணிசமான ஆசிரியர்கள் ஓய்வு பெறுவர் என்பதால், அதன் பின் புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்யலாமா என, துறை முதலில் ஆலோசித்தது.
ஆனால், ஐந்து மாதங்கள் வரை பணியிடம் வழங்காவிட்டால், பிரச்னை மேலும் பெரிதாகும் என்பதால், தற்போது புதிய முடிவை எடுத்துள்ளது.ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளில், பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய இடங்களில், இடைநிலை ஆசிரியர்களே பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஆரம்பப் பள்ளி வகுப்புகளுக்கு (1 முதல் 5 வரை) மாற்றிவிட்டு, அந்த இடங்களில், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய, துறை ஆலோசித்து வருகிறது.

இது குறித்து, மாவட்ட வாரியாக புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று நடைபெறும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில், பணியிடங்களை இறுதி செய்வது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.

பொங்கலுக்குள் நல்ல செய்தி:தொடக்க கல்வி இயக்குனர் சங்கரிடம், இந்தப் பிரச்னை குறித்து கேட்ட போது, ""புதிய பட்டதாரி ஆசிரியர்கள் தேவை உள்ள இடங்களை கண்டறிந்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களிடம், உரிய புள்ளி விவரங்களைப் பெற்றுள்ளோம். அதன் அடிப்படையில், பொங்கலுக்குள் புதிய ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி அறிவிக்கப்படும்,'' என்றார்.- ஏ.சங்கரன் -
NEWS From -kalvicholai
Blogger Widgets
Back to TOP Testf