flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

வெள்ளி, ஜனவரி 20, 2012

"தானே' புயல் நிவாரணத்துக்காக, தமிழக அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளை சீரமைக்க, அதிகளவு நிதி தேவைப்படும் என்பதால், தாராளமாக நிதி வழங்கும்படி, முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து, பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், தங்கள் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை, புயல் நிவாரணத்துக்கு தர தயாராக இருப்பதாக, அரசுக்கு கடிதங்கள் கொடுத்திருந்தனர்.

இதை ஏற்று, தலைமைச் செயலர் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு: ஒரு நாள் சம்பளத்தை வழங்க விரும்பும் ஊழியர்கள், தங்கள் சம்மதத்தை, சம்பந்தப்பட்ட சம்பள கணக்கு அதிகாரியிடம் எழுத்துபூர்வமாக கொடுக்க வேண்டும்.

* பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும்.

* ஒரு நாளுக்கு மேலாக சம்பளத்தை தர விரும்பும் ஊழியர், எத்தனை நாட்கள் பிடித்தம் செய்யலாம் என்பதை எழுதிக் கொடுக்கலாம்.

* இந்த உத்தரவு, அனைத்து உள்ளாட்சிகள், பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், கழகங்கள், உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் இதர நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

* இந்த நன்கொடை என்பது, முற்றிலும் தானாக விரும்பி வந்து கொடுக்கின்றனர் என்பதை, சம்பள கணக்கு அதிகாரி உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Blogger Widgets
Back to TOP Testf