flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

திங்கள், பிப்ரவரி 27, 2012

 அனைத்து தொடக்கப் பள்ளிகளில் 28ம்தேதி அறிவியல் கண்காட்சி

வரும் 28ம் தேதி, தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி, அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்த வேண்டும் என, அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அதன் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்கக் கல்வி இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது. தொடக்கக் கல்வித் துறையில் பயிலும் இளம் மாணவர்களிடையே அறிவியல் வேட்கையையும், அறிவியல் மனப்பான்மையையும், வளர்க்க வேண்டியது ஆசிரியரின் கடமை.
குழந்தைகள் இளம்பருவத்தில் அறிவியலின்பால் ஏற்படும் ஈடுபாடு அவர்களை உலகின் மிகச்சிறந்த அறிவியல் மேதைகளாக உருவாக்குவதற்கு அடித்தளமாக அமையும். இதை நிறைவேற்றும் வகையில், வரும் 28ம்தேதி தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி, தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்த வேண்டும். இது தொடர்பான அறிவுரையை உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு அலவன்சுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்கள், தங்களின் குழந்தைகளின் கல்விக்காக செலவிட்ட தொகையை, அரசிடம் இருந்து பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. இதன்படி, குறைந்தபட்சம் 5 வயது நிரம்பிய குழந்தைகளின் கல்விச் செலவுகளை மட்டுமே, அரசிடம் கோர முடியும்.இது தொடர்பாக, மத்திய அரசு ஊழியர்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து, குறைந்தபட்ச வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு, நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும், இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
                       தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் வெளியிட்ட அறிக்கை: மின் பற்றாக்குறையால் ஏற்படும், மின்வெட்டை சமாளிக்கும் விதத்தில் அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் ஜெனரேட்டர் பயன்படுத்துவதற்கும், அதற்கான தொகை மற்றும் டீசல் செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் அறிவித்திருப்பது, பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் 10ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள், தடையின்றி படிக்கவும், கற்றல் - கற்பித்தல் பணி சிறப்பாக நடக்கவும் உதவிய முதல்வருக்கு நன்றி. இவ்வாறு இளமாறன் கூறியுள்ளார்.

சனி, பிப்ரவரி 25, 2012

முதுநிலை விரிவுரையாளர் தேர்வு:619 பேரின் விண்ணப்பங்கள் ஏற்பு

மார்ச் 4ம் தேதி நடக்கும், முதுநிலை விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வை எழுத, 619 பேர் தகுதி பெற்றுள்ளனர்.ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத் துறையில், 34 முதுநிலை விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு, அடுத்த மாதம், 4ம் தேதி நடக்கிறது.இதற்கு, 830 பேர் விண்ணப்பம் செய்ததில், 619 பேர் தேர்வெழுத தகுதி பெற்றுள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கு, மார்ச் 1ம் தேதிக்குள், "ஹால் டிக்கெட்' கிடைக்கும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.தேர்வர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், அனைத்துப் பாடங்களுக்கும் சேர்த்து, சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தேர்வு நடைபெறும் என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி அறிவித்துள்ளார்.
கட்டுரை
செயல்வழிக் கற்றல் தடுமாறும் செயலாக்கம்
வே. வசந்திதேவி
நான் மட்டும் ஒரு கவிஞனாக இருந்தால், ஐந்து விரல்களின் அற்புதத்தைப் பற்றிக் கவிதை பாடுவேன்... கைகளின் வழி அறிவுக்குக் கல்வி புகட்ட வேண்டும். தங்கள் கைகளைப் பயிற்றுவிக்காதவர்களின் ... வாழ்வில் இசையில்லை. அவர்களது அனைத்துத் திறமைகளும் வளர்க்கப்படுவதில்லை. வெறும் புத்தக அறிவு குழந்தைக்கு ஆர்வமிக்கதாக இல்லை. வெறும் வார்த்தைகளால் மூளை களைப்படைந்து விடுகிறது; குழந்தையின் கவனம் சிதறத்தொடங்குகிறது ...
- மகாத்மா காந்தி, 1939

வியாழன், பிப்ரவரி 23, 2012

அனைவருக்கும் இடை நிலைக்கல்வி இயக்கம் சார்பில், சுற்றுலா செல்லும் அரசு உயர், மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

புதன், பிப்ரவரி 22, 2012



T·¸eL¥« AÛUoNŸ pYT‡ ÚY|ÚLÖ· UÖQYŸL·, Bp¡VŸLÛ[ ÙT¼Ú\ÖŸL[ÖL ŒÛ]eLÚY|•

Bp¡VŸLÛ[ UÖQY-UÖQ«L· RjL· ÙT¼Ú\ÖŸL[ÖL ŒÛ]eLÚY|• GÁ¿ T·¸eL¥«†‰Û\ AÛUoNŸ GÁ.BŸ.pYT‡ ÚY|ÚLÖ· «|†RÖŸ.

L¥« A‡LÖ¡L· iyP•

ÙNÁÛ]›¥ Bp¡ÛV EUÖ UÚLÍY¡, YhTÛ\›¥ AYW‰ Yh“ UÖQYWÖ¥ L†‡VÖ¥ h†‡eÙLÖÛX ÙNšVTyPÖŸ.

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

பிளஸ் 2 பாடத் திட்டங்களை மாற்ற தமிழக அரசு திட்டம்:அறிமுகமாகி 8 ஆண்டுகள் ஆனதால் நடவடிக்கை

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்கள் அறிமுகமாகி, எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால், புதிய பாடத் திட்டங்களை தயாரிப்பது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.2004ல் அறிமுகம்: பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்கள் அறிமுகமாகி, எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. 2004ல், பிளஸ் 1 வகுப்புகளுக்கும், 2005ல், பிளஸ் 2 வகுப்புகளுக்கும், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்-


சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மே இறுதியில், ஆசிரியர் தகுதித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை, ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை, எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
காலியிடங்கள் நிரப்பப்படும்: கல்வி அமைச்சர் சிவபதி அறிக்கை
பொதுத்தேர்வு நடைபெறும் நேரத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் விடுப்பு எடுக்கக்கூடாது என தமிழக கல்வி அமைச்சர் சிவபதி கூறியுள்ளார். சென்னையில் நடந்த மாவட்ட கல்வி அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: மாணவர்களுக்கோ, தேர்வு எழுதும் இடங்களில் உள்ள பிரச்னைகள் இருந்தால் அதனை தீர்க்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். கிராமப்புறங்களில் தேர்வு எழுத தேவையான பெஞ்ச் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பதவியிடம் ஒருவாரத்தில் நிரப்பப்படும். 430 பணியிடத்திற்கு தமிழக தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். 710 இளநிலை உதவியாளர் பதவியிடங்கள் தற்காலிக ஊழியர்கள் மூலம் கொண்டு நிரப்பப்படும் என கூறினார்.

திங்கள், பிப்ரவரி 20, 2012

 அலுவலக காலிப்பணியிடம் நிரப்பஆரம்பப்பள்ளி ஆசிரியர் கோரிக்கைஅலுவலக காலிப்பணியிடம் நிரப்பஆரம்பப்பள்ளி ஆசிரியர் கோரிக்கை
மோகனூர்: "தொடக்ககல்வித் துறையின் நிர்வாக நலன், ஆசிரியர் நலன் கருதி, உதவித் தொடக்கக்கல்வி அலுவலக காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, வட்டார நிர்வாகிகள் செயற்குழு கூட்டம், மோகனூரில் நடந்தது. வட்டாரத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் நிர்மலா வரவேற்றார்.
G.O Ms.No.36 February 17, 2012 பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கான குறைந்த பட்ச வயது வரம்பு மற்றும் டிசம்பர் 2010 மற்றும் அதற்கு முந்தைய தேர்வுகளுக்கு பழைய பாடத்திட்டத்தின்படி 8ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஏப்ரல் 2012 மற்றும் ஏப்ரல் 2013ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள இரு பருவத் தேர்வுகளுக்கு மட்டும் பழைய பாடத்திட்டத்தின்படி தேர்வெழுத அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
கல்விமுறையை மாற்றி அமைக்கவேண்டும்:
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்

                           அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க இன்றைய கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூறினார்.
கோவை பீளமேடு கொடிசியா கண்காட்சி அரங்கில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 16வது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சிறப்புரையாற்றினார்.

சனி, பிப்ரவரி 18, 2012

                                  விருதுநகர் மாவட்டத்தில், ஆசிரியருக்கு மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததால், பள்ளிகளில் அதிகாரிகள் மொபைல் போன் ரெய்டு நடத்தினர். பள்ளிகளில், மாணவர்களால், ஆசிரியருக்கு கொலை மிரட்டல் வருவதால், பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் ஆசிரியர் கண்டிப்பால், மாணவர் தற்கொலை சம்பவங்களும் அரங்கேறுகின்றன. மாணவர்களில் பலர், பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்துவதாக புகார் வந்தது.
 குழந்தையை சேர்க்க மறுத்தால் தலைமை ஆசிரியருக்கு அபராதம்
"பள்ளியில், குழந்தைகளை சேர்க்க மறுக்கும் தலைமை ஆசிரியருக்கு முதல் முறை 25 ஆயிரம் ரூபாயும், அதே தவறை மீண்டும் செய்தால் 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்' என, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள், விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, சென்னையில் நேற்று வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

செவ்வாய், பிப்ரவரி 14, 2012

பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு ! | வினவு!
ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக 8 லட்சம் விண்ணப்பங்கள் : விண்ணப்பம் ரூ.50; தேர்வுக் கட்டணம் ரூ.500
மே இறுதியில் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, எட்டு லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. விண்ணப்பத்தின் விலை, 50 ரூபாயாகவும், தேர்வுக் கட்டணம், 500 ரூபாயாகவும் நிர்ணயிக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் பிப்ரவரி 28-02-2012 ஞாயிறு அன்று அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ளது. அத்தேர்விற்கு தகுதியானவர்களின் பட்டியலைத் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

திங்கள், பிப்ரவரி 13, 2012

மாணவர்களை தண்டிக்கும் அதிகாரம் தேவை
வகுப்பறைகளில் அட்டூழியம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு அதிகாரம் வழங்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என, சமச்சீர் கல்விக் குழு முன்னாள் உறுப்பினர் கிறிஸ்துதாஸ் வலியுறுத்தினார்.

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

ஆசிரியர்கள், மாணவர்களைக் கண்டிப்பத்தை நிறுத்த அரசாங்கம் சட்டத்தில் சில மடத்தனமான மாற்றங்களைக் கொண்டுவந்தது. ஆனால், ஆசிரியர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் எத்தகைய சட்டங்களை வகுத்துள்ளது? என்பது பெரிய கேள்வி.
இன்நேரம் இதேபோல, ஆசிரியர் ஒருவர் அடித்து மாணவன்/மாணவி மரணம் அடைந்து இருந்தால்…… இந்நேரம் தமிழகம் முழுவதும் பெற்றோர்களும்/மனித உரிமைச் சங்கங்களும் கொந்தளித்து இருக்காதா?
மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது, பெற்றோரிடம் மாணவனின் நிலையை எடுத்துச் சொல்லக் கூடாது, பள்ளியின் ஆண்டு தேர்ச்சி விகிதமும் குறையக் கூடாது…… உருப்பட்டாப்லதான்.


see more
 தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்வி மேம்பாட்டு பணிமனை பயிற்சி
திருநெல்வேலி:தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வள்ளியூர் வட்டார கிளை சார்பில் கல்வி மேம்பாட்டு பணிமனை பயிற்சி 2 நாட்கள் நடந்தது.
முதல் நாள் நடந்த துவக்க விழாவிற்கு வட்டார தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். செயலாளர் மோதிலால் ராஜ் வரவேற்றார். இப்பயிற்சியை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுடலைமணி துவக்கி வைத்து பேசினார். மாநில பொது செயலாளர் ரங்கராஜன் சிறப்புரை ஆற்றினார்.
 தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஓய்வு பெற்றோர் பிரிவு துவக்க விழா
திருநெல்வேலி:தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஓய்வு பெற்றோர் பிரிவு அமைப்பு துவக்க விழா வள்ளியூரில் நடந்தது.மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தர்மராஜ் பிராங்களின் வரவேற்றார்.மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், விருதுநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநில ஓய்வு பெற்றோர் பிரிவு தென் மண்டல அமைப்பாளர் மருது, மாநில துணை செயலாளர் செய்யது இப்ராகிம் மூசா, மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கிராஜ் உட்பட பலர் பேசினர்.
புதுடில்லி: : தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை, ரூ.3 லட்சமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கலாகிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் பட்ஜெட் அமையும் என கூறப்படுகிறது. இந்நிலையில், வருமானவரி உச்சவரம்பினை 2 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாயின. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என கூறப்பட்டது.

வியாழன், பிப்ரவரி 09, 2012

ராமநாதபுரம் :தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ள, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை உடனடியாக ஈர்த்துக் கொள்ள கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் ராமநாதபுரம் அரண்மனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

புதுடில்லி : வருமான வரி விலக்கு வரம்பை, 2 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகிறது.

ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

ராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான்

எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரையிலான உயர்நிலைக் கல்வியை விரிவுபடுத்துவதையும் அதன் தரத்தைஉயர்த்துவதையும் ராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான் திட்டம் (RSMA)நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும்சுமார் 5 கி. மீட்டருக்குள் உயர்நிலைக் கல்வியை (பத்தாம் வகுப்பு வரை)கொண்டு செல்ல உள்ளது.

வியாழன், பிப்ரவரி 02, 2012

""இங்கு ஒரு தடவை சிறப்புத் தமிழ் பாடத்தை எடுத்துவிட்டால், கடைசி வரை தமிழைப் படித்து தான் சாக வேண்டும்; அப்புறம் மாற்றிக் கொள்ளவே முடியாது. இந்த நிலையெல்லாம் உடனடியாக மாறாது,'' என, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குனர் கார்மேகம் பேசினார்.
Blogger Widgets
Back to TOP Testf