flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

புதன், ஏப்ரல் 04, 2012

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழு மத்திய அரசிடம் புகார்.
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் அப்துல்மஜீத் கூறியதாவது:
தமிழகத்தில் 37000 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 83 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பணி காலத்துக்கு பிறகு ஓய்வு ஊதியம் பெறுவது உள்ளிட்ட நலன்களுக்காக மேற்கண்ட ஆசிரியர்கள் பி.எப் செலுத்தி வந்தனர். இது மாதம் ஒன்றுக்கு ரூ 210 கோடி இருக்கும். அதே போல வரி பிடித்தம் உள்ள தொகை மாதம் ஒன்றுக்கு ரூ500 கோடி செலுத்தி வந்தனர். கடந்த 36 ஆண்டுகளாக மேற்கண்ட ஆசிரியர்கள் செலுத்திய தொகையில் நிர்வாகத்தில் உள்ள சிலர் கையாடல் செய்துள்ளனர்.
இதன்படி திருவெறும்பூர் வட்டத்தில் ஆசிரியர்களின் பணம் ரூ74 லட்சம், தருமபுரியில்
ரூ73 லட்சம் , கம்மாவரம் ரூ40 லட்சம், நாகபட்டினத்தில் ரூ1 கோடியே 22 லட்சம் என கையாடல் செய்துள்ளனர். இந்த கையாடல் குறித்து தமிழக அரசிடம் கடந்த 19 ஆண்டுகளாக ஆசிரியர்கள் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. பலகட்டமாக போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லை. இந்த கையாடல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்தும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழு கடந்த வாரம் டெல்லி சென்றது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் , மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், இணை அமைச்சர் புரந்தேஸ்வரி ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தோம். இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment about this post...

Blogger Widgets
Back to TOP Testf