flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

வியாழன், ஏப்ரல் 26, 2012

பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் இனி வேலையை இழப்பர்: அமைச்சர்

 பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மீதான பிடியை இறுக்க, கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. இந்தப் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள், டிஸ்மிஸ் செய்யப்படுவர் என துறை அமைச்சர் சிவபதி, ஏற்கனவே அறிவித்துள்ளார்.

தற்போது கூடுதலாக சம்பந்தபட்ட ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்யலாம் எனவும், கல்வித்துறை பரிந்துரை செய்ய உள்ளது. மாணவியரிடம் பாலியல் ரீதியாக பிரச்னைகள் தரும் ஆசிரியர்களால், கல்வித் துறைக்கும், தமிழக அரசுக்கும் அவ்வப்போது தர்மசங்கடமான நிலை உருவாகிறது.

அமைச்சர் அறிவிப்பு: இதுபோன்ற புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள், உடனடியாக, "சஸ்பெண்ட்' செய்யப்படுகின்றனர். பின், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கு தடை உள்ளிட்ட, சில நடவடிக்கைகளை கல்வித்துறை எடுக்கும். ஆனாலும், இந்நடவடிக்கைகளால் ஆசிரியர்களுக்கு, பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

இந்த விவகாரம் தொடர்பாக, 18ம் தேதி சட்டசபையில் பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, ""பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கடுமையாக்குவது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. அவர்களை, "டிஸ்மிஸ்' செய்யலாமா என்பது குறித்து, ஆலோசித்து வருகிறோம்,' என்றார்.

அதிரடி நடவடிக்கை: அமைச்சரின் இந்த அறிவிப்பை, வழக்கம்போல் வெறும், "மிரட்டல்' என்றே ஆசிரியர்கள் கருதினர். ஆனால், தற்போது இந்த விவகாரம், "சீரியசாக;' மாறியுள்ளது. பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் மீது, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை ஒரு அறிக்கையை தயாரித்து உள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, மாணவியரிடம் தவறாக நடப்பதும், பாலியல் புகார்களில் சிக்குவதும், சமுதாயத்திற்கு ஆரோக்கியமான விஷயம் கிடையாது. இதுபோன்று அவ்வப்போது நடக்கும் சில சம்பவங்கள், கல்வித்துறைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, இவர்களை பணியில் இருந்து நீக்குவதுடன், அவர்களின் சான்றிதழ்களை ரத்தும் செய்யலாம். அப்போதுதான், வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் நடக்காது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விரைவில் பரிந்துரை: இதையே, தமிழக அரசுக்கு பரிந்துரை அறிக்கையாக அனுப்ப, கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. "டிஸ்மிஸ்' செய்தால், சம்பந்தபட்ட ஆசிரியர்கள், தனியார் வேலைகளிலாவது சேரலாம். ஆனால், அவர்களின் சான்றிதழ்களையே ரத்து செய்வது, அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் உலை வைப்பது போல் ஆகிவிடும்.

அதிகபட்சமாக, தவறு செய்யும் ஆசிரியர்களை, "டிஸ்மிஸ்' செய்ய அரசு முடிவெடுக்கும் எனவும்; சான்றிதழ்களை ரத்து செய்யும் முடிவை அரசு எடுக்காது என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசு பள்ளிகள் மட்டும்தானா?: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் கூறியதாவது: பாலியல் புகார்கள், அரசு பள்ளிகளில் மட்டுமில்லாமல், தனியார் பள்ளிகளிலும் அதிகம் நடக்கின்றன. துறைரீதியாக விசாரித்து, புகார் உண்மை என முடிவானால், அதிகபட்சமாக என்ன தண்டனை வேண்டுமானாலும், அரசு வழங்கட்டும்; அதை ஏற்கிறோம். பல இடங்களில், பொய் புகார்கள் அதிகளவில் வருகின்றன. அதனால், தீர விசாரிப்பது அவசியம்.

அதேநேரத்தில், சான்றிதழ்களை ரத்து செய்வது சரியல்ல; ஏற்க முடியாதது. எதற்கெடுத்தாலும், அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதுதான் குற்றம் சாட்டப்படுகிறது. தனியார் பள்ளிகளில், பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. விஷயம் வெளியில் தெரிந்தால், சம்பந்தபட்ட ஆசிரியரை வேலை நீக்கம் செய்து விடுகின்றனர். பின்னர், அந்த ஆசிரியர் வேறு பள்ளியில் சேர்ந்து, மீண்டும் சேட்டை செய்வார். இவர்களை கட்டுப்படுத்த அரசு, முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment about this post...

Blogger Widgets
Back to TOP Testf